ஆளும் கட்சித் தேர்தல் வாக்கெடுப்பில் வெற்றிபெற்று ஜப்பானின் அடுத்த பிரதமராக புமியோ கிஷிடா தெரிவானார்.
ஜப்பானில் ஆளுங்கட்சியின் தலைவராக இருப்பவரே பிரதமராக பொறுப்பேற்பர். அதன்படி, பிரதமர் சுகா பதவி விலகுவதாக அறிவித்த நிலையில், ஆளுங்கட்சியான லிபரல் ஜனநாயகக் கட்சிக்குள் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது.
அதில் 64 வயதான அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் புமியோ கிஷிடா ஆளும் லிபரல் டெமோக்ரடிக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 64 வயதான புமியோ கிஷிடா ஜப்பானின் அடுத்த பிரதமராக எதிர்வரும் ஒக்டோபர் -04ஆம் திகதி பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சித் தோ்தலில் புமியோ கிஷிடா 257 வாக்குகளை பெற்றார். அதே நேரத்தில் கோனோ 170 பெற்றார்.
இரண்டு பெண் வேட்பாளர்களான முன்னாள் தகவல் தொடர்பு அமைச்சரான சானே தகைச்சி மற்றும் ஆளும் லிபரல் டெமோக்ரடிக் பொதுச் செயலாளர் சீகோ நோடா ஆகியோர் முதல் சுற்று வாக்கெடுப்பில் தோல்வியடைந்தனர்.
இதனையடுத்து கோனோ மற்றும் கிஷிடா இடையே இருதரப்புப் போட்டியில் கிஷிடா வெற்றி பெற்றார்.